ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் இயக்குனர் ஆய்வு

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

Update: 2024-07-04 12:20 GMT

கூடுதல் இயக்குனர் ஆய்வு 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் பெயரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் அவர்களின் ஆலோசனை பெயரில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் கூடுதல் இயக்குனர் மருத்துவர் சித்ரா அவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

மாநில திட்ட அலுவலர் செந்தில் முன்னிலையில் மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் தர்மர் கலந்து கொண்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணிகள் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் போதிய படுக்கை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டார். நோயாளிகளிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார். மருத்துவமனையில் நோயாளிகளுக்காக தயார் செய்யும் உணவினை தரமாக செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் புதிய அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்ட பட்டு வளர்ச்சி துறை பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குனர் மருத்துவர் சித்ரா மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் மருத்துவர் தர்மர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் மதன்குமார்பங்கேற்றனர்.

Tags:    

Similar News