மக்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகள்
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைத்திடும் வகையில் புதிய பேருந்துகளின் இயக்கம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 04:51 GMT
மக்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகள்
திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மக்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைத்திடும் வகையில் புதிய சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தில்லைநகா், அரசு மருத்துவமனை, ஆட்சியரகம் வழியாக மணப்பாறை செல்ல கூடுதல் பேருந்து இயக்கப்படுகிறது (தினமும் 3 நடை). மருதாண்டாகுறிச்சி, பிரகாஷ் நகா், அரவனூா், மேலபாண்டமங்கலம், லிங்க நகா் பகுதி மக்களுக்கு காலை, மாலைகளில் கூடுதலாக பேருந்து இயக்கப்படுகிறது (தினமும் 4 நடை). ரெட்டைவாய்க்கால் உய்யக்கொண்டான் திருமலை, சீனிவாசநகா், குமரன் நகா் பகுதி மக்களுக்காகவும் காலை, மாலைகளில் கூடுல் பேருந்து இயக்கப்படுகிறது. புதிய பேருந்துகள் இயக்கத்தை திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், புதன்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்வில், தொழிலதிபா் கே.என். அருண் நேரு, போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் சக்திவேல் மற்றும் தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்.