பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரணம்: கோரிக்கை!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழஅரசடி ஊராட்சி பகுதிகளுக்கு தமிழக அரசு ரூ.6ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-01-30 06:30 GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழஅரசடி ஊராட்சி பகுதிகளுக்கு தமிழக அரசு ரூ.6ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன் மற்றும் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அளித்துள்ள மனுவில், கீழஅரசடி ஊராட்சியில் கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் விடுகள், கால்நடைகள் சேதம் ஏற்பட்டு உள்ளது. மழைநீர் தொடர்ந்து வந்ததால் துப்பாஸ்பட்டி, ஞானபிரகாசியார் நகர், கீழஅரசடி, அய்யனார்புரம், வெள்ளபட்டி பகுதிகிளல் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் கூடுதலாக உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.1000 போதுமானது இல்லை. கூடுதலாக ரூ.5000 வழங்க வேண்டும். கீழஅரசடி ஊராட்சி தூத்துக்குடி மிக அருகில் உள்ளதால் தூத்துக்குடி போன்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள் பாதிப்புகளை முறையாக மதிப்பீடு செய்யவில்லை. எனவே, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.