ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணி - ஆட்சியர்

சுந்தரராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-02 05:56 GMT
ஆட்சியர் ஜெயசீலன்

விருதுநகர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் பாட முதுகலை பட்டாதாரி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000/- என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது 2024-2025 இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர். பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு முதுகலைபட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரிய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலருக்கும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவதுடன் இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானதாகும். தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 28.06.2024 முதல் 05.07.2024-க்குள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News