ஆதிதிராவிடர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி !

சேலம் அருகே உள்ள வலசையூரில் ஆதிதிராவிடர்களுக்கு வழக்கப்பட்ட நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலித் கூட்டமைப்பு சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-07-09 05:59 GMT
ஆதிதிராவிடர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி !

ஆர்ப்பாட்டம் 

  • whatsapp icon

சேலம் அருகே உள்ள வலசையூரில் ஆதிதிராவிடர்களுக்கு வழக்கப்பட்ட நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலித் கூட்டமைப்பு சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு நிர்வாகி வக்கீல் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இந்திய குடியரசு கட்சியின் மாநில கவுரவ தலைவர் வணங்காமுடி, தமிழ்நாடு பவுத்த அறநெறியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், வலசையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 6 ஏக்கர் பஞ்சமி நிலத்தை அரசு வழங்கியது. அதில் பல ஆண்டுகளாக 450-க்கும் மேற்பட்டவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகிறோம்.

சிலர் அங்கிருந்த 25 குடிசைகளை இடித்து அகற்றி விட்டு அந்த நிலத்தை ஆக்கிரமித்து விட்டனர். மேலும் அங்குள்ள அனைத்து குடிசைகளையும் அகற்றி விட்டு நிலத்தை அபகரிக்க முயல்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர். இதில் வலசையூர் கிராம மக்கள் மற்றும் தலித் கூட்டமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் பிருந்தா தேவியிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

Tags:    

Similar News