ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவில் யானையின் பராமரிப்பு செலவை ஏற்ற நிறுவனம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானையின் மாதாந்திர பராமரிப்பு செலவு தொகையை நாராயணி நிதி நிறுவனம் ஏற்றது.

Update: 2024-04-28 10:12 GMT

பராமரிப்பு செலவை ஏற்ற நிறுவனம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானையின் மாதாந்திர பராமரிப்பு செலவு தொகையை திருவாரூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் நாராயணி நிதி நிறுவனம் ஏற்றது.

இதையொட்டி கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மாத பராமரிப்பு தொகை ரூபாய் 60 ஆயிரத்துக்கான காசோலையை நாராயணி நிதி நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் நேரில் வழங்கினார்.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வர சாமி கோவில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற மகாமக விழா உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உடைய இந்த கோவிலில் உள்ள யானை மங்கலம் தனது சுட்டித்தனத்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பிரபலமான யானையாக இருந்து வருகிறது. இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரால் ஆதி கும்பேஸ்வர சாமி கோவிலுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது. யானை மங்கலத்துக்கு சளி தொந்தரவு இருப்பதால் தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்லாமல், சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகைகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. மங்கலம் யானையின் மாதாந்திர பராமரிப்பு செலவு தொகையை கோவில் நிர்வாகம் ஏற்று இருந்தது. இந்த நிலையில் திருவாரூரை தலைமை இடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் நாராயணி நிதி நிறுவனம் மங்கலம் யானையின் பராமரிப்பு செலவை நேற்று முதல் ஏற்றுக்கொண்டது.

இதையொட்டி நேற்று மாலை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாராயணனி நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன் மங்களம் யானையின் முதல் மாத பராமரிப்பு செலவுக்கான ரூபாய் 60 ஆயிரத்துக்கான நிதியை கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் நேரில் வழங்கினார். இது குறித்து கார்த்திகேயன் கூறுகையில், உலகப் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்கலம் மிகவும் சுட்டித்தனத்துடன் பொதுமக்கள் குழந்தைகளை கவர்ந்து வருகிறது. இந்த யானையின் பராமரிப்பு செலவுகளை கோவில் நிர்வாகம் கவனித்து வந்த நிலையில் தற்போது எங்களது நாராயண நிதி நிறுவனத்தின் மூலம் யானையின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்து,

அதன்படி முதல் மாத பராமரிப்பு தொகையாக ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதைப்போல் தொடர்ந்து யானை பராமரிப்புக்கான செலவுத் தொகையை வருகிற மாதங்களில் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு யானை மங்களத்தை முறையாக பராமரித்து யானையின் நலனை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News