ஆதியூர் கண்மாய் மீன்பிடி குத்தகைதாரர் கொலை வழக்கு: மூன்று பேர் கைது
ஆதியூர் கண்மாய் மீன்பிடி குத்தகைதாரர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் வயது 60 இவர் இராஜபாளையம் தென்றல் நகர் பின்புறம் உள்ள ஆதியூர் கண்மாயை மீன்பிடி குத்தகைக்கு எடுத்துள்ளார் கண்மாயில் குடிசை அமைத்து காவல் பணியில் மூன்று பேரை வேலைக்கு வைத்துள்ளார் .
இதில் கார்த்தீஸ்வரன் ஆனந்த் ஆகிய இருவரும் மீன்களை பிடித்து விற்பனையில் ஈடுபட்டு வந்த பொழுது கார்த்தீஸ்வரனும் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் மீனுக்கு வலை போடுவதும் இது போன்ற சம்பவங்கள் ஈடுபட்டுள்ளனர் இந்த தகவல் அறிந்த தர்மராஜ் இருவரையும் கண்டித்து வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.
நேற்றைய முன் தினம் ஆனந்தராஜ் தர்மராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி அதற்கு உடந்தையாக கார்த்தீஸ்வரன் ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பாண்டி மகேஷ் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தர்மராஜா கொலை செய்யும் நோக்கத்துடன் கண்மாய் கரைக்கு வந்துள்ளனர்.
ஆனந்தராஜ் மற்றும் மகேஷ் ஆள் யாரும் வருகின்றனரா என்ற பார்த்துக் கொள்ள கார்த்தீஸ்வரனும் பாண்டியும் மது போதையில் தர்மராஜை முகம் இரண்டாகவும் கை கால்கள் துண்டிக்கும் அளவிற்க்கு கொடூர கொலை செய்தனர் . இந்த கொலை சம்பந்தமாக இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் சார்பு ஆய்வாளர் கமலக்கண்ணன்,
மற்றும் போலீசார் குற்றவாளிகளை பல இடங்களில் தேடிச் சென்றபோது இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி காட்டுக்குள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது போலீசார் தேடிச் சென்றபோது கார்த்தீஸ்வரன் பாண்டியன் இருவரும் போலீசாரை பார்த்து ஓடும் போது போலீசார் விரட்டி பிடித்துள்ளனர் அப்போது போலீசார் தள்ளிவிட்டு இருவரும் தப்பிச் செல்லும் பொழுது கீழே விழுந்ததில் முதல் குற்றவாளி கார்த்தீஸ்வரன் கால் முறிவு ஏற்பட்டும் பாண்டிக்கு கை முறிவு ஏற்பட்டும் இவர்களை பிடிக்கச் சென்ற,
போலீசாருக்கு சிறிய காயம் ஏற்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று போலீசார் பணிக்கு சென்றனர் குற்றவாளி இருவரும் இராஜபாளையம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் மற்றொரு குற்றவாளி ஆனந்தராஜ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார் தப்பி சென்ற மற்றொரு குற்றவாளியான மகேசை போலீசார் தேடி வருகின்றனர்