பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - விவசாயிகள் தர்ணா
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் எந்தவித காரணங்கள் இன்றி பேச்சுவார்த்தை ஒத்திவைத்ததால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அறை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-01-14 07:34 GMT
திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தண்ணீர் திறந்து விடாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகவும் ,இது குறித்து மூன்று முறை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேச்சுவார்த்தைக்கு முன் தினம் இரவு பேச்சுவார்த்தையை ஒத்திவைத்ததாக அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் , இதனால் தங்களுக்கு குடிநீர் ஆதாரமும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதால் உடனடியாக உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் , உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய நீருக்கு அதிக அளவு திருமூர்த்தி அணையில் இருப்பதால் உடனடியாக தங்கள் தண்ணீர் தேவை பூர்த்தி செய்ய உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும் , அதேபோல் பிஏபி ஆயகட்டு அல்லாத நிலங்களை பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட பிஏபி கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்படாமல் இருப்பதால் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உப்பாறு அணை நீர் பயன்படுத்தப்படுவதாகவும், நீர்வளத்துறை பொறியாளர்களால் நீர் திரட்டில் ஈடுபடுபவர்கள் மீது கருப்பு பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இதுவரை ஒரு நபரை கூட கருப்பு பட்டியில் சேர்க்கப்படவில்லை எனவும், கடந்த மாதம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தவுடன் உடுமலை கோட்டாட்சியர் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 30 மின் இணைப்புகளை துண்டிப்பு செய்த நிலையில் தாராபுரம் மற்றும் திருப்பூர் கோட்டாட்சியர்கள் மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் , முறையான கண்காணிப்பை நடத்தி தண்ணீர் திருட்டை தடுக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கான தண்ணீர் தேவை பூர்த்தி ஆகும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாவட்ட ஆட்சியர் அறை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.