தாராபுரத்தில் விதை குறித்து  துணை இயக்குனர் திடீர் ஆய்வு

தாராபுரத்தில் துணை இயக்குனர் திடீர் விதை ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-05-28 12:32 GMT

விதை ஆய்வு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில்  சுமார் 117 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது.  அதில் 40   நெல் உற்பத்தி மற்றும்  விற்பனை  நிலையங்கள் உள்ளது. அந்த 40 விதை உற்பத்தி நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விதை நெல்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு ஈரோடு, விதை ஆய்வு துணை இயக்குனர் திருமதி சுமதி அவர்களின் தலைமையில் தாராபுரத்தில் உள்ள நெல் விதை விற்பனை நிலையங்களில் திடீர் குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது  விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு இருந்த குடோன் ஆய்வு செய்யப்பட்டது.

விதை இருப்பு பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை விற்பனை பட்டியல், விதை இருப்பு மற்றும் விற்பனை விபரத்தை   ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்த விபரங்களை  பார்வையிடப்பட்டது. மேலும் குடோனில்  விதை நெல் மூட்டைகள்  சரியான முறையில் அடுக்கி வைக்கப்பட்டு, சுத்தமாகவும், பூச்சி தாக்குதல் இன்றியும் பராமரிக்கப்படுகிறதா என்ன ஆய்வு செய்யப்பட்டது.  சான்று செய்யப்பட்ட விதை நெல் மூட்டைகளில்  ஈயவில்லைகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.  

 ஆய்வின்போது இருப்பு பதிவேடிற்கும், உண்மை இருப்பிற்கும் வேறுபாடு இருந்த விதை குவியல்கள் மற்றும் விற்பனைப்பட்டியல்,விதை  இருப்பு பதிவேடு முறையாக    பராமரிக்கப்படாமல் 4 விதை  குவியல்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது.  விற்பனை தடை செய்யப்பட்ட குவியல்களின் அளவானது 42870 கிலோ, அதன் மதிப்பு 12,92,310 ரூபாய் ஆகும்.  மேலும்  ஆய்வின்போது விதையாய்வு துணை இயக்குனர் அவர்கள் நெல் விதை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் விதைகள் சட்டம் 1966 இன் படி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும்   பதிவேடுகள் பற்றி எடுத்துககூறினார். ஆய்வின்போது விதை ஆய்வாளர் தாராபுரம் , விதை ஆய்வாளர் காங்கேயம் மற்றும் விதை ஆய்வாளர் பவானி  ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News