குலுக்கல் முறையில் எல்.கே.ஜி.மாணவர்கள் சேர்க்கை!

புதுக்கோட்டை ஏவிசிசி மழலையர் பள்ளியில் குலுக்கல் முறையில் எல்.கே.ஜி.மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

Update: 2024-05-28 14:23 GMT

25% இலவசகல்வி இட ஒதுக்கீடு ! ஏவிசிசி மழலையர் பள்ளியில் குலுக்கல் முறையில் எல்.கே.ஜி.மாணவர்கள் சேர்க்கை! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா நேரில் பார்வையிட்டார்! இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் ஆண்டுதோறும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% குழந்தைகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த கல்வி ஆண்டில் புதுக்கோட்டை திலகர்திடல் ஏவிசிசி மழலையர் பள்ளியில் தங்கள் குழந்தைகளை எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக அதிகமான பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர்.

அரசு நிர்ணயித்த இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை காட்டிலும் அதிக அளவில் பெற்றோர்கள் விண்ணப்பித்திருந்த காரணத்தால் அரசு விதிமுறைகளின்படி பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் காத்திருப்போர் பெயர் பட்டியலும் தயார் செய்யப்பட்டு பள்ளி அறிவுப்பு பலகையில் ஒட்டப்பட்டது. முன்னதாக ஏவிசிசி மழலையர் பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா மாணவர்கள் தேர்வு செய்யப்படும் குலுக்கல் நடைமுறைகளை பார்வையிட்டார். புதுக்கோட்டை வட்டார வள மைய கல்வி பயிற்றுநர் சின்னையா ஆவணங்களை சரிபார்த்தார்.பள்ளி நிறுவனர் ஏவிசிசி கணேசன்,தாளாளர் மல்லிகா கணேசன் மற்றும் ஆசிரியைகள்,பெற்றோர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News