திருப்பூர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் தொழிற்கல்வி பெறலாம்.ஐடிஐ-யில் பயின்றவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 750 வழங்கப்படுவதுடன் இலவச பம்பாய், சைக்கிள், வரைபட கருவிகள், பாடப்புத்தகங்கள், சீருடை,
காலணி, புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பிரதி மாதம் ரூ. 1000 வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று பயிற்சியில் சேரலாம்.
மேலும் விவரங்களுக்கு 99428-11559, 8668041629 மற்றும் 9944206017 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்...