அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம்

பெரம்பலூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-05-19 05:35 GMT

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் மே - 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், அல்லது கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகளான அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, கணிப்பொறியில் துறை, ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் மட்டுமே, மாணவர்கள் பதிவு கட்டணத்தை Credit Card, Debit card, மற்றும் Net Banking மூலமாக செலுத்தலாம்.

Advertisement

SC,ST மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. முதலாமாண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மே 24ம் தேதி அன்று கடைசி நாளாகும். முதலாமாண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அறிய அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04328-243200, 8610739233, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கல்லூரி முதல்வர் முகேஷ்குமார் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News