அங்கன்வாடி குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்கை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அங்கன்வாடி குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்க்கை நடைப்பெற்றது.
கந்தர்வகோட்டையில் அங்கன்வாடி குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டனர். கந்தர்வகோட்டையில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து அலுவலகம் மூலம் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு சிறுவர்கள் சேர்ந்து கல்வி கற்று வருகின்றனர். விளையாட்டும் கற்றுத் தரப்படுகிறது.
மேலும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு 5 வயது முடிந்தவுடன், மாற்று சான்றிதழ் வழங்கி அருகில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில்சேர்த்து விடப்படுகிறார்கள்.
இதேபோல், கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சோ. விஜயலட்சுமி முன்னிலையில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, அங்கன்வாடி மாணவியை முதல் வகுப்பில் சேர்த்தார். மேலும் அனைத்து அங்கன்வாடி குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தினார்.