அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை
வேப்பந்தட்டை அருகே அதிமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-26 05:43 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விஜயபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் விஜய புரம் அ.தி.மு.க. கிளை கழக பிரதிநிதியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், சுதன், சஞ்சய், ராகுல் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் அங்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்