கருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

கருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.;

Update: 2024-02-14 09:01 GMT


கருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.


ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் பேரூராட்சி 8-வது வார்டு கொல்லத்தெருவில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் கோவிந்தசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் அசோகன், கோவிந்தராஜ், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் விக்னேஷ், கருப்பூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி தலைமை தாங்கி பேசும் போது, ‘அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு கணினி, சைக்கிள், ஏழை களுக்கு ஆடு, மாடு வளர்ப்பு போன்ற திட்டங்களால் பொதுமக்கள் பயனடைந்தனர். அதே நேரத்தில் தற்போதைய தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது’ என்றார்.

அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் திலீபனும் கலந்துகொண்டு பேசினார். இதில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் சுரேஷ்குமார், கருப்பூர் பேரூர் நிர்வாகிகள் உப்புக்கிணறு ஜீவா, முருகன், பாலு, தங்கராஜ், குப்பன், அண்ணாமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News