மயிலாடுதுறையில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கிராம கிரமாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2024-04-15 14:08 GMT

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கிராம கிரமாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு தீவிர வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கிராம மக்கள் பயன்பெறும் அனைத்து திட்டங்களும் பெற்று தருவேன் என அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு கிராம மக்களிடம் வாக்குறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், நாடாளுமன்ற வேட்பா பாளருமான பி.பாபு. இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திறந்த ஜீப்பில் திருப்பனந்தாள் பகுதிகளுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு தஞ்சை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து வேட்பாளர் பாபு திருப்பனந்தாள் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி, அணைக்கரை விநாயகன் தெரு, ஒழுகச்சேரி அக்கரஹாரம், தத்துவாஞ்சேரி, கோவில்ராமபுரம், கோனுளாம்பள்ளம், காமாட்சிபுரம், பந்தநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது பி.பாபு பேசுகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடியில் நீரொழுங்கிகள் (ரெகுலேட்டர்) அமைக்கப்படும் என கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான அரசானையை வெளியிட்டார். இதனையடுத்து கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் நீரொழுங்கிகள் அமைக்கப்படவுள்ளது. இதனால் நாகை, கடலூர் மாவட்டங்களில் மேலும் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அதே நேரத்தில் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. மேலும் மழை வெள்ளக் காலங்களில் இந்த நீரொழுங்கிகள் மூலம் 6 டிஎம்சி தண்ணீரை கடலில் கலக்காமல் தடுத்து இருபுறமும் பிரித்து அனுப்ப முடியும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1600 மீட்டர் நீளத்தில் 15 அடி அகலத்தில் அந்த நீரொழுங்கிகள் அமைக்கப்படும். இதில் மக்கள் பயன்பாட்டுக்கு இருவழிப்பாதையும் அமைக்கப்படுகிறது. இப்பணிகளுக்கான நிதியை அ.தி.மு.க அரசு ஒதுக்கீடு செய்துவிட்டது. ஆனால் தி.மு.க ஆட்சியில் பணிகள் மந்தமாக நடைபெற்றது இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர் என குற்றம் சாட்டி பேசினார். வாக்கு சேகரிப்பின்போது அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் கருணாநிதி பேரூர் செயலாளர் மூர்த்தி,தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News