வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற அதிமுக வலியுறுத்தல்

நாகர்கோவிலில் நடந்த அதிமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டத்தில் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு வழியாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்களின் நலன் கருதி வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-03-14 08:16 GMT

ஆலோசனை கூட்டம் 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக வழக்கறிஞர் அணி சார்பாக 2024 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கழக வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்  நாகர்கோவில் வைத்து நடைபெற்றது.  குமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு கன்னியாகுமரி (கி) மாவட்ட கழக செயலாளர் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு பேசினார்.     

 கூட்டத்தில் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு வழியாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்களின் நலன் கருதி வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், பணிகள் முடிவடைந்த நிலையில் திறக்கப்படாமல் உள்ள பூதப்பாண்டி நீதிமன்றங்கள், வாகனம் நிறுத்துமிடம், குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றை உடனடியாக திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பரமேஸ்வரன், குமரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அருள் பிரகாஷ் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News