'ஒற்றை விரலால், ஓங்கி அடிப்போம்' - வீடியோ வெளியீடு

அதிமுக ஐடி விங் சார்பில் தயாரிக்கப்பட்ட 'ஒற்றை விரலால், ஓங்கி அடிப்போம்' பிரச்சார வீடியோவை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Update: 2024-03-25 07:48 GMT

வீடியோ வெளியீடு 

மேடை பிரச்சாரத்தைத் தாண்டி, இன்றைய இளைஞர்களை கவரும் வகையில், அவர்களது விரல் நுனி யில் உள்ள செல்போன்களை தேர்தல் பிரச்சாரம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று ஐடி அணியிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே பிரச்சாரத்துக்கு என்று தயாரிக்கப்பட்ட பாடல்களையும் சமூகவலைதளங்களில் வைரலாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இப்போது அவரே களம் இறங்கிவிட்டார்.

தமிழக வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு, தான் பேசும் வீடியோ ஒன்றை பழனிசாமி தனது எக்ஸ் தளத் தில் நேற்று வெளியிட்டுள்ளார். அதில், 'வாக்காளப் பெருமக்களே, உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் திருச்சியில் தொடங்கி, தமிழகம் முழுவதும் உங்களை சந்திக்க வருகிறேன்.

தமிழர் உரிமை மீட்போம், தமிழகம் காப்போம். நம் மாநிலத்துக்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்' இவ்வாறு பழனிசாமி பேசியுள்ளார். இந்த வீடியோவை அதிமுகவினர் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News