பொற்கிழி வழங்கிய அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர்
தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக முன்னோடி பரமனுக்கு ரூ. 5000 பொற்கிழியாக வழங்கப்பட்டது.;
Update: 2024-06-24 10:15 GMT
தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக முன்னோடி பரமனுக்கு ரூ. 5000 பொற்கிழியாக வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை 70 நாள் நிகழ்வாக அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா கொண்டாடி வருகின்றார்.அந்த வகையில் நேற்று (ஜூன் 23) 43 வது நாள் நிகழ்ச்சியாக வி.எம் சத்திரத்தை சேர்ந்த அதிமுக முன்னோடி பரமனுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். இதில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.