அ.தி.மு.க. சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
தியாகதுருகம் அ.தி.மு.க., நகர செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-11 04:44 GMT
தியாகதுருகம் அ.தி.மு.க., நகர செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தியாகதுருகம் அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம் சுந்தர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் 1,000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் அய்யம்பெருமாள். துணைச் செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெ., பேரவைச் செயலாளர் வேல்நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, கவி பைனான்ஸ் உரிமையாளர் பாலமுரளி கிருஷ்ணன், மதன்ராஜ் டூவீலர் கன்சல்டிங் உரிமையாளர் சங்கர். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரதாப் ராஜ், பாசறை செயலாளர் அருண், சதீஷ் மெடிக்கல் உரிமையாளர் அருள் உட்பட நிர்வாகிகள். தொண்டர்கள் பங்கேற்றனர்.