மாவட்ட வேளாண் துணை இயக்குநர் நேரில் ஆய்வு !

பழனியில் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாத்து சாகுபடி செய்யும் முறை, இயற்கை உரங்களை நெல் சாகுபடிக்கு எவ்வறு பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கப்பட்டது.

Update: 2024-03-13 06:02 GMT

வேளாண் துணை இயக்குநர் நேரில் ஆய்வு

பழநி அருகே தொப்பம்பட்டி வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஜெயராமன்,மரபுசார் நெல் ரகங்கள் சாகுபடி செய்யும் இனத்தின் கீழ் கீரனூர் வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் 50% மானியத்தில் சீரக சம்பா, தூயமல்லி பூங்கார் மற்றும் அறுபதாங் குறுவை நெல் ரகங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பழநி மானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ்குமார் என்பவர் தூயமல்லி நெல் விதைகளை மானியத்தில் வாங்கி நெல்சாகுபடி செய்துள்ளார்.இந்த வயலை மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மாநிலத் திட்டம் காளிமுத்து நேரடியாக பார்வையிட்டு மரபுசார் நெல் ரகங்களை எவ்வாறு சாகுபடி செய்வது?, மதிப்பு கூட்டி விற்பனை செய்வது?, சந்தைப்படுத்தும் முறைகள் மற்றும் இயற்கை உரங்களை நெல் சாகுபடிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்ற ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
Tags:    

Similar News