கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த ஆட்கள் இறங்குவதை தவிர்க்க ஆலோசனை

காஞ்சிபுரத்தில் நடந்த ஆதிதிராவிடர் நல குழு கூட்டத்தில், கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த ஆட்கள் இறங்குவதை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Update: 2024-06-16 08:13 GMT

காஞ்சிபுரத்தில் ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, கழிவுநீர் தொட்டியில் பணியாளர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட அளவில், ஆதிதிராவிடர் நல குழு கூட்டம், கலெக்டர் அலுவலத்தில், நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் முன்னிலை வகித்தார். வீட்டுமனை இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்குதல், மயானம், பாதை வசதி ஏற்படுத்துதல், நலத்துறை பள்ளி மற்றும் விடுதிகளில், காலி பணி இடங்களை நிரப்புதல், தாட்கோ கடனுதவி வழங்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்பு வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல், நிலுவையில் உள்ள விசாரணை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது. மேலும், துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, மருத்துவ பரிசோதனை செய்தல், கழிவுநீர் தொட்டிகளில் பணியாளர்களை பயன்படுத்துவதை தவித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயகுமார் உட்பட பல துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News