மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அறிவுரை

மத்திய அரசாங்கம் வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களை தமிழக அரசு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.இதில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது என மத்திய இணை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-11-21 13:25 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மத்திய இணையமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நமது லட்சிய வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ரசாயனம் , உரம் மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறை மத்திய இணை அமைச்சர் பகவத் குபா அவர்கள் தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கினார்.

மேலும் வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் 5 நபருக்கு காய்கறி தொகுப்பு ,ஐந்து நபருக்கு சமையல் எரிவாயு இணைப்பு, தண்டராம்பட்டு உழவர் பணி கூட்டுறவு சங்கம் மூலம் ஐந்து நபருக்கு கேசிசி கடன் அட்டை, மகளிர் குழுவிற்கு 52 லட்சம் ரூபாய் காண கடன் அனுமதி சீட்டு இந்தியன் வங்கி தண்டராம்பட்டு கிளை மூலம் வழங்கினார்.

மேலும் 4 பயனாளிகளுக்கு 42 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் காண அனுமதி சீட்டு வழங்கினார். முன்னதாக வேளாண்மை அறிவியல் மையத்தில் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் வரவேற்புரை வழங்கினார் .முடிவில் வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் மருத்துவர் கா மாயகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார் . மதராஸ் உர நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆளில்லா விமான மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்க விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் K P மோகன் பொது மேலாளர் BPNL , ஆபிசர் பி பி எஸ் ஒய், எஸ் கௌரி முன்னோடி வங்கி மேலாளர் இந்தியன் வங்கி ,அருண் விஜய் உதவி பொது மேலாளர் நபார்டு வங்கி ,கே திலகம் முதுநிலை மேலாளர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், R. சிவக்குமார் நிறுவனம் மேலாளர் மதராஸ் உர நிறுவனம் , . C. துளசிங்கம் துணை மேலாளர் மதராஸ் உர நிறுவனம் ,எ நாராயணன் உதவி மேலாளர் மக்கள் மருந்தகம் கவர்மெண்ட் ஆப் இந்தியா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அவர் பேசுகையில் மத்திய அரசாங்கம் வழங்கக்கூடிய நல திட்டங்களை தமிழக அரசு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது. மற்றும் அரசு அதிகாரிகள் மத்திய அரசாங்கம் வழங்கக்கூடிய திட்டங்களை ஊடக வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மற்றும் மத்திய அரசாங்கம் வழங்கக்கூடிய அனைத்து நல திட்டங்களும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் மற்றும் இந்தியா வல்லரசு நாடாக அமைய வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

மத்திய அரசாங்கம் கருவுற்ற பெண்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 5000 வழங்குகின்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது அதேபோல் விவசாயிகளுக்கு அவருடைய நேரடி வங்கி கணக்கில் ரூபாய் 12000 வருடத்திற்கு ஆறு கவலையாக செலுத்தப்படுகிறது பொதுமக்களுக்கு விபத்து காப்பீடு பிரீமியம் தொகை மிக குறைந்த அளவில் வசூலிக்கப்பட்டு பின்னர் எழுப்பீடு ஏற்பட்டால் நேரடியாக கிடைத்த இடைத்தரகர் இன்றி வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது மிக எளிய முறையில். இந்தியாவில் ஒரே மாதிரியான உரங்கள் வழங்கப்படுகின்றன இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது

அதே போல் விவசாய காப்பீடும் வழங்கப்பட்டு வருகின்றனர். புலம்பெயர்ந்த மக்களுக்கு ஏதாவது ஒரு அடிப்படையான முகவரி அடையாள அட்டை வழங்கினால் அவர்கள் விரும்பி இடத்தில் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகின்றன இலவச எரிவாயு இணைப்பு பல லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற எண்ணற்ற மத்திய அரசு நல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர் பாலசுப்ரமணியம் வடக்கு மாவட்ட தலைவர் சி ஏழுமலை மாவட்டம் பொருளாளர் எஸ் பி கே சுப்பிரமணியன் மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் அறவாழி மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னாள் மாவட்ட தலைவர்கள் எம் ஆர் தர்மன் விஜயன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News