இடைத்தேர்தல் விசிக சார்பில் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து விசிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-16 13:44 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், விக்கிரவாண்டி தொகுதி காணை, கோலியனூர் ஒன்றிய ஆலோசனைக்கூட்டம் காணை வசந்த மாளிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார்,தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகம் செய்து விக்கிரவாண்டி தொகுதியிங வெற்றிபெறுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.பொன் கௌதம சிகாமணி, மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் குணவழகன், மாவட்டச் செயலாளர்கள் பெரியார், விடுதலை செல்வன், அறிவுக்கரசு , ஒன்றியச் செயலாளர்கள் கல்பட்டு இராஜா, ஆர்.முருகன், ஆர்.பி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News