நாகர்கோவிலில் காவலர்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி

நாகர்கோவிலில் காவலர்களின் குறைகளை எஸ்பி கேட்டறிந்தார்.

Update: 2024-06-30 14:39 GMT
போலீஸ் காவாத்து முகாம்

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் தலைமையில் வாராந்திர கவாத்து நடைபெற்றது.      

இதில் காவலர்களுக்கு, ஆயுதங்களின் செயல்பாடு குறித்த வகுப்பு  நடைபெற்றது. மேலும் கைதி வழிக்காவல் மற்றும் முக்கிய பிரமுகர் வழிக்காவல் அலுவலில் எவ்வாறு  முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் பயிற்சி அளிக்கப்பட்டது.      இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை  கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

    இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர் பின்னர் எஸ் பி சுந்தர வதனம் பேசுகையில், -  ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும். கைதிகளை அழைத்து செல்லும்போதும் முக்கிய பிரமுகர்களின் வழி காவல் பணியில் ஈடுபடும் போதும்  முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.      

முன்னதாக போலீசாரின் பயிற்சி நடந்த நடக்க இந்த நிலையில் ஆயுதப்படை மைதானத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் அது ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர்கள் ஓய்வு அறைகள், அலுவலகங்கள், மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News