பாளையில் போலீஸ் விசாரணை முடிந்து பாதிரியாருக்கு மீண்டும் சிறை

பாளையில் போலீஸ் விசாரணை முடிந்து பாதிரியாருக்கு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2024-02-01 10:42 GMT
பாதிரியார் ராபின்சன்

குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள மயிலோடு தேவாலய பாதிரியார் அலுவலகத்தில் வைத்து கடந்த 20ஆம் தேதி போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார்  என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இரணியல் போலீசார் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  

    இதில் ஆலய பாதிரியார் ராபின்சன் என்பவர் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கின் முதல் எதிரியான   வழக்கறிஞர் மற்றும் திமுக ஒன்றிய  செயலாளருமான ரமேஷ் பாபு நாகை கோர்ட்டில் சரணடைந்தார்.      இந்த நிலையில் திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியாரை நேற்று முன்தினம் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில்  எடுத்து விசாரணை தொடங்கியது.      நேற்று இரவு வரை இரணியல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதில்  மாவட்ட எஸ்பி சுந்தரவதனமும் விசாரணை மேற்கொண்டார்.   இது தொடர்பாக பாதிரியாரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நாட்கள் போலீஸ்  காவல் இன்று மாலை முடிவடைய உள்ள நிலையில்,   முன்னதாக நேற்று மாலையிலேயே பாதிரியார் ராபின்சனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் அவர் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags:    

Similar News