விருதுநகரில் வீடு வாங்கி மக்கள் சேவை செய்வேன்:விஜய பிரபாகரன்

வெற்றிக்கு பிறகு விருதுநகரில் வீடு வாங்கி மக்கள் சேவை செய்வேன் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-26 16:44 GMT

செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபகரன்

 சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு ராதிகாவின் பேச்சுக்கு பதில் அளித்த விஜய பிரபாகரன் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தால் விருதுநகரிலேயே வீடு வாங்கி குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தி

ருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை இல்லத்திற்கு அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரும் நடிகர் விஜயகாந்தின் மகனுமாகிய விஜயபிரபாகரன் நேரில் சென்று வாழ்த்து பெற்றார் அவருக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். _தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் விஜயகாந்தின் மறைவிற்கு பின்பு தேர்தலை சந்திக்கிறீர்கள் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேள்விக்கு_ எனது

Advertisement

தந்தை இல்லாதது எங்களுக்கு பலவீனமாக இருந்தாலும் விஜயகாந்தின் பெயரும் புகழும் எங்களுக்கு நிச்சயம் வெற்றியை தேடித் தரும் என்றார். _தொடர்ந்து மக்களின் அடிப்படை தேவைகளை பிரச்சாரத்தில் முன் வைப்பீர்களா? என்ற கேள்விக்கு_ விருதுநகர் தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகிறோம். அடிப்படை பிரச்சனைகள் குறித்து நிச்சயம் குரல் எழுப்பி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்றார்.

_அருப்புக்கோட்டையில் பேசிய பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன் போல தான் என்று கூறியதால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்குமா? என்ற கேள்விக்கு_ பதில் அளித்த விஜயபிரபாகர் ராதிகாவின் மகளும் நானும் ஒன்றாக படித்தவர்கள் அந்த அடிப்படையில் கூறியுள்ளார். அதே போல் சரத்குமாரும் எனது தந்தையும் ஒன்றாக நடித்துள்ளார்கள் இதனால் வாக்கு வங்கி பாதிக்காது. சினிமா நட்பு என்பது வேறு அரசியல் வேறு என பதில் அளித்தார். _தொடர்ந்து சென்னையில் இருக்கும் நீங்கள் விருதுநகர் தொகுதிக்கு மக்கள் சேவை செய்வதற்கான வாய்ப்பு எப்படி சாத்தியமாகும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு_ செ

ன்னையிலிருந்து மதுரைக்கு 1 மணி நேரம் தான் விமான பயணம் அதனால் மக்களை அடிக்கடி சந்திப்பேன். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக சென்று அதை தீர்க்க முயற்சிக்க வேண்டும் என எனது தந்தை அடிக்கடி எங்களுக்கு பாடம் எடுத்துள்ளார். என்னை வெற்றி பெற வைத்தால் விருதுநகரிலேயே வீடு வாங்கி குடியேறினால் என்ன செய்வீர்கள்? என்று நிருபர்களிடம் கேள்வி எழுப்பிய விஜய பிரபாகர் விருதுநகரில் வீடு வாங்கி குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒற்றைச் செங்கங்கலை காண்பித்து எய்ம்ஸ் குறித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்று கேள்வி எழுப்பியதற்கு இடையில் குறிப்பிட்ட எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார்

அவர் வைத்திருக்கும் செங்கலால் எந்த பிரயோஜனமும் இல்லை இப்போது சிமெண்ட் செங்கல் வந்துவிட்டது கான்கிரீட் சுவர் வந்துவிட்டது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் உள்ள சுற்றுச்சுவர் கூட கான்கிரீட் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் கட்டிடமும் சிமெண்ட்கல் மற்றும் கான்கிரீட் சுவரால் நிச்சயம் கட்டப்படும் அவர் வைத்திருக்கும் செங்கல் வேலைக்கு ஆகாது என விளக்கம் அளித்தார்.

Tags:    

Similar News