பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னிவசந்த விழா துவக்கம்
செஞ்சி அருகே பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னிவசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பொன்பத்தி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா மற்றும் கிராம தேவதை திருத்தேர் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், கொடிமரத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்று விழா நடைபெற்றது.
தொடர்ந்து வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) செம்பாத்தம் மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 8-ந் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம், 11-ந் தேதி தவசுஏறும் நிகழ்ச்சியும், 14-ந் தேதி மாலை 5 மணிக்கு செம்பாத்தம்மன், பச்சையம்மன் திருத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. பின்னர் 15-ந் தேதி(புதன்கிழமை) மதியம் 2 மணிக்குதுரியோதனன் படுகலமும், 3 மணிக்கு தீமிதி விழாவும், 16-ந் தேதி (வியாழக்கிழமை) தர்மர் பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து உபயதாரர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.