விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
வேப்பந்தட்டை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்டக் கலவைகள் பற்றி ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
Update: 2024-05-17 09:06 GMT
பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களின் ஊரக வேளாண் அனுபவ பணியில் ஒரு பகுதியாக மாணவர்கள் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்டக் கலவைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில், பயிறு ஒன்டர், பருத்தி பிளஸ். நிலக்கடலை ரிச், மக்காச்சோளம் | மேக்சிம், ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் பற்றியும், அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும், அவற்றை எவ்வாறு பயிர்கள் எடுத்துக் கொள்கிறது என்பதை பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர். இந்த பயிர் ஊக்குவிகளை பயன்படுத்துவதால் பயிர்களில் மகசூல் 15 முதல் 20 சதவீத வரை அதிகரிக்கிறது என்பதை விவசாயிகளுக்கு தெரிவித்தனர். எனவே, மாணவர்கள் விவசாயிகளுக்கு நுண்ணூட்டக் கலவையை வாங்கி பயன்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்