வேளாண் கல்லூரி மாணவிகள் மக்காச்சோள விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

ஆத்தூர் அருகே அப்பம்மா சமுத்திரம் கிராமத்தில் எம் ஐ டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மக்காச்சோள செயல்முறை விளக்கங்கள் அளித்தனர்

Update: 2024-04-05 09:57 GMT
மக்காசோள விவசாயிகளுக்கு பயிற்சி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அப்பம்மா சமுத்திரம் ஊராட்சியில் எம் ஐ டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் மக்காச்சோள வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மக்காச்சோள விவசாயிகளுக்கு படைப்புழு தாக்கத்தை குறைப்பதற்காகவும் மற்றும் வேளாண் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகள் நுண்ணுயிர் உரமான டிரைக்கோ டெர்மா விரிடி உள்ளிட்ட உரங்கள் வழங்கப்பட்டு நுண்ணுயிர் உரத்தின் நன்மைகள் மற்றும் பலனை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News