வேளாண் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மரக்காணம் அடுத்த செட்டிக்குப்பம் கிராமத்தில் நடந்த கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-02-13 05:37 GMT

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 

கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மரக்காணம் அடுத்த செட்டிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது .இக்கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். கால்நடைகள் பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று அவரர் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.

வேளாண்மை துறையின் மூலம் குடும்பத்திற்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள், உயிர் உரங்கள் விநியோகம், மின்கல தெளிப்பான் விநியோகம் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. நெல் பயிருக்கு சிங் சல்பேட், ஜிப்சம் தார்பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்க இருப்பது குறித்தும் இதுகுறித்து உழவன் செயலியில் முன்பதிவு செய்வது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. கால்நடை துறையின் மூலம் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகம் நடைபெறுவது குறித்தும், மரக்காணம் ஒழுங்குமுறை கூடம் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது குறித்தும், பி எம் கிசான் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் நேரடி பட்டா தேவைப்படுவதால் அதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து பெறுவது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

கூட்டத்தின் போது கால்நடை உதவி மருத்துவர் சாந்தி, வேளாண்மை அலுவலர் தேவி, உதவி வேளாண்மை அலுவலர் மஞ்சு, கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பால்வண்ணன் சரவணன் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகளுடன் சுமார் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News