வார்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி!
வார்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி.
Update: 2024-05-07 17:03 GMT
பொன்னமராவதி அருகேயுள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. குடுமியான்மலையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு வார்ப்பட்டு ஊராட்சித் தலைவர் அழகுமலர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள்,கத்தரிக்காய் ரகங்கள், சிறுதானியங்கள், தக்காளி ரகங்கள், தேனீப் பெட்டி, தேனீப் பெட்டி கையாள உபகரணங்கள், காண்டாமிருக வண்டு பொறி, மண்புழு உரம் தயாரிப்பு பை, மண்புழு உரம், மண்புழு செறிவூட்டப்பட்ட நீர், அக்னி அஸ்திரம், உயிரிக் கட்டுப்பாட்டு நுண்ணுயிர்கள், மீன் அமிலம், அமிர்தக் கரைசல், பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள், மாவூப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டு, அதன் தகவல்களை மாணவர்கள் விவசாயிகளிடம்