வேளாண் நிதிநிலை அறிக்கை - விவசாயிகள் ஏமாற்றம்
விவசாயிகள் வாழ்வு மென்மேலும் செழிக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு நிதி நிலை அறிக்கை வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் இலவு காத்த கிளியாக ஏமாற்றமே அடைந்துள்ளனர் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தெரிவித்தார்.
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு இலவு காத்த கிளியாகதான் உள்ளது. - விவசாயி சங்கத்தலைவர் வேலுசாமி வேதனை இதுகுறித்து
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா. வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழக அரசு 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது இதில் விவசாயிகளின் வாழ்வு முன்னேற்றம் அடைவதற்குண்டான எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இல்லை, கரும்பு டன் ஒன்றுக்கு நடப்பு அரவை பருவத்தில் ஊக்கத்தொகை ரூபாய் 250 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை.
திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர்கள் விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயத்திற்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் கரும்பு, நெல் மற்றும் ஏனைய விளை பொருட்களுக்கு உண்டான ஆதார விலை எதுவும் இன்றுவரை நிர்ணயிக்கப்படவில்லை. சிறுதானிய பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு எந்த ஒரு ஊக்கமும் வழங்கப்படவில்லை.
காவிரியில் உரிய பங்கை கர்நாடகம் தராத நிலையில், விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவான வகையில் எந்த ஒரு புதிய நீர் மேலாண்மை திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் விவசாயிகள் வாழ்வு மென்மேலும் செழிக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு இது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது இதனால் விவசாயிகள் இலவு காத்த கிளியாக ஏமாற்றமே அடைந்துள்ளனர். என்று தெரிவித்துள்ளார்.