குமரியில் குறைந்த வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள்

கன்னியாகுமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்த வாடகைக்கு வேளாண் இயந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 04:59 GMT

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய ஆட்சியர் 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கி கலெக்டர்  பேசியதாவது :- கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பலமேற்றும் கருவிகள், வெளிச்சந்தையை விட குறைந்த வாடகைக்கு  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண் பொறியியல் துறை மூலமாக மானியம் பெற்று வாங்கப்பட்டுள்ளன.

அவற்றை குறைந்தவாடகை யில் பெற கூட்டுறவுசங்கங்க  இணையதளத்தின் மூலமாகவும், இரவிபுதூா், வெள்ளிக்கோடு, மயிலாடி, வீரவநல்லூா், திட்டுவிளை, முகிலன்விளை, ஈத்தாமொழி, வீரநாராயணசேரி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நேரில் முன்பதிவு செய்தும் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா். நிகழ்ச்சியில் , கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ச.லீ.சிவகாமி, வேளாண்மை துறை இணை இயக்குநா் அ. ஆல்பா்ட் ராபின்சன்,தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஒய். ஷீலாஜான், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ஜெ. சில்வஸ்டா்சொணலதா, துணைப்பதிவாளா்( நாகா்கோவில்) சி.ச.முருசேகன், துணைப்பதிவாளா், (பொதுவிநியோகத்திட்டம்)ஆ.குருசாமி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News