வேர்க்கடலை வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு
வேர்க்கடலை வயல்களில் வேளாண் அதிகாரி ஆய்வு;
Update: 2024-07-10 05:12 GMT
அதிகாரி ஆய்வு
சங்கராபுரம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வேர்க்கடலை மற்றும் கம்பு பயிர்களை வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார். நெடுமானுார், அரசம்பட்டு கிராமங்களில் ஆய்வின்போது, முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கிராம வேளாண்மை முன்னேற்றக் குழு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து சங்கராபுரம் வேளாண் அலுவலகத்தில் பதிவேடுகளை சரி பார்த்தார். பின் விதை பண்ணை கிடங்குகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, உதவி விதை அலுவலர் துரை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா உடனிருந்தனர்.