மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்ப்டடி அருகேயுள்ள கொசவபட்டியில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி வழங்கினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 13:02 GMT
திண்டுக்கல் மாவட்டம், சாணார்ப்டடி அருகே கொசவப்பட்டியில் செம்பட்டி ஆர்.வி.எஸ். தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் ஹரித்ராதேவி, ஜெயஶ்ரீ, ஜெனனிசுபா, கலைச்செல்வி, காருண்யா, கஸ்தூரி உள்ளிட்ட மாணவிகள் மண்புழு உரம் தயாரித்தல் பற்றி கிராம மக்களிடம் விளக்கம் அளித்துள்ளனர்.
கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் படி மண்புழு உரம் தயாரிப்பதற்கான இடம் தேர்வு செய்தல், மண்புழுவின் வகைகள், உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள் மற்றும் உற்பத்தி செய்யும் முறைகள் பற்றி மாணவிகள் விளக்கினர்.