விவசாய கண்காட்சி நடத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்.

மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகத்தில் விவசாய கண்காட்சி நடத்தி முசிறி எம். ஐ. டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-05-17 09:10 GMT

விவசாய கண்காட்சி 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகத்தில் விவசாய கண்காட்சி நடத்தினர்.

இந்த கண்காட்சியில் பட்டுப்புழு வளர்ப்பு, தழைக்கூளம், சொட்டுநீர் பாசனம், ஊடுபயிர் பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் உயிர் உரங்கள், அதன் பயன்கள், சிறந்த விதைத்தேர்வின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினர். மேலும் கண்காட்சி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் முசிறி எம். ஐ. டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உதவி பேராசியர் ஷாலினி, மாணவிகள் அபர்ணா, அபிநயா, அபிராமி, அப்ரின்பானு, அக்ஷயா, அனுஸ்ரீ, ஆரோக்கிய ப்ரனிதா,அனு மற்றும் மண்ணச்சநல்லூர் வேளாண்மை அலுவலர் வேளாண்மை உதவி அலுவலர்கள்,விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News