தர்மபுரியில் வேளாண்மை துறை அமைச்சர் ஆய்வு !

தர்மபுரி வின்னாம்பட்டி ரயில்வே மேம்பாலம் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிட பணிகளை வேளாண்மை துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-15 07:17 GMT

 அமைச்சர் ஆய்வு

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர் அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்ட அறிவிப்பு வெளியானது அதை தொடர்ந்து இன்று வெண்ணாம்பட்டி மேம்பாலம் அமைக்கும் பணிகள் குறித்து பாரதிபுரம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தர்மபுரி பொதுப் பணித் துறை ஆய்வு மாளிகையில் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று புதிய ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கட்டுமான பணிகளை குறித்து பார்வை செய்தனர் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் அதிகாரி உடன் இருந்தனர்.

Tags:    

Similar News