மண்ணின் வளம் பெருக விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரி ஆலோசனை

மண்ணின் வளம் பெருக, தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும் என தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-04-25 11:16 GMT

வேளாண் விரிவாக்க மையம்

 உதவி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,பயிர்கள் நன்கு வளர, விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாளடைவில் மண்வளம் நிரந்தரமாக பாதிக்கும் சூழல் ஏற்படலாம்.

அதைதவிர்க்க, மண் வளத்தை இயற்கையாக அதிகரிக்கும் வகையில், மண்ணுக்கு தழைச்சத்தை கொடுக்கும் தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும். குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்தவுடன், இன்னொரு பயிரை பயிரிடுவதற்கு முன்புள்ள இடைவெளியில், தக்கை பூண்டு பயிரிடலாம். இந்த செடிகள் 45 நாட்கள் முதல் 85 நாட்களில் நன்கு வளர்ந்து விடும். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் போதுமானது.

தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும்.இச்செடிகளின் வேர் முடிச்சுகளில் 80 சதவீதமும், இலைகளில் 30 சதவீதமும் தழைச்சத்து உள்ளது. நன்கு வளர்ந்த செடிகளை மடக்கி உழுதுவிட வேண்டும். பின்னர், இந்நிலத்தில் பயிரிடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரத்தின் தேவை இருக்காது.

ஆண்டுக்கு ஒரு முறை இதை பயிரிட்டு, நன்கு வளர்ந்த செடிகளை டிராக்டர் கொண்டு உழுவதால், செடிகள் மண்ணோடு மண்ணாகி, நிலத்துக்கு தேவையான தழைச்சத்து பெருகி பயிர் கள் ஊட்டம் பெறும். இம்முறையை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News