தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

பி.எம்.கிசான் நிதி உதவி பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Update: 2024-06-28 06:50 GMT

பைல் படம் 

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குண சேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரியின் விவசாய கவுரவ ஊக்கத் தொகை, 4 மாதங்களுக்கு ஒரு முறை ₹2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ₹6 ஆயிரம், தவணை முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயன்பெற இ-கேஒய்சி செய்திருக்க வேண்டும்.

மேலும், நில ஆவணங்கள் பதிவேற்றம்,வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். மாவட்டத்தில் 5,795 பயனாளிகள் இ-கேஒய்சி முடிக்காமலும், 4,087 பயனாளிகள் வங்கி கணக் குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ள னர். இ-கேஒய்சி மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News