பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10 ஆயிரம் மீனவர்கள் விடுமுறை
தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்பட 32- க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்கு சுமார் 4500 நாட்டுப் படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசை படகுகளும் உள்ளன. இங்கு விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. மேலும், படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.