நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை....
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தா தேவி நேற்று முன்தினம் இரவு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிரமாக கண்காணித்தார். அந்த வகையில் சூரமங்கலம், இரும்பாலை சாலை, தாரமங்கலம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதியில் நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படைகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை கலெக்டர் பிருந்தாதேவி கண்காணித்தார்.
ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி முன்னிலையில் சூரமங்கலம் பகுதியில் நடந்த பறக்கும் படை சோதனையின் போது மோட்டார் சைக்கிள் வந்த ஒருவரை குழுவினர் சோதனை செய்தனர். அதில் அவர், உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து அதை கருவூலத்தில் செலுத்த நடவடிக்கை மேற்ெகாண்டனர். இந்த கண்காணிப்பு பணிக்கு பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அலுவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.