அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா
Update: 2023-10-17 12:20 GMT
தொடக்க விழா
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இராஜா கவுண்டம்பாளையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். சரஸ்வதி அதிமுக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
இதேபோல் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் பரணிதரன், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் பழ. ராமலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் மற்றும் மகளிரணியினர் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.