அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம்

எம்ஜிஆர் திடலில் அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-27 12:52 GMT

அதிமுக பொதுக்கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 52 - ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் கட்சியின் 52 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கட்சி வளர்ச்சி குறித்தும், கட்சி சாதித்தவை குறித்தும் பொது மக்களிடைய விளக்க பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்காரன் பட்டி எம்ஜிஆர் தொடரில் நேற்று இரவு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் அதிமுக மாவட்ட செயலாளர் மாநகர் எம் ஆர் விஜயபாஸ்கர், கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் குளித்தலை ஒன்றிய அளவிலான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News