செய்யாற்றில் அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டதை கள ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம், ராந்தம், இருமரம், மூங்கில்பட்டு. சட்டுவந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் கள ஆய்வு நடைபெற்றது. கள ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி பொறுப்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கள ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை,மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், மாவட்ட மகளிரணி செயலாளர் ராணி பெருமாள், தூசி ஊராட்சி தலைவர் வெற்றி செல்வம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு வேலூர் மண்டல துணை செயலாளர் நிவாஸ், ஒன்றிய செயலாளர்கள் சி.துரை, ரங்கநாதன், பேரவை துணை செயலாளர் கன்னியப்பன், மாணவரணி செயலாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.