ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய அதிமுக தொண்டன் !!
மயிலாடுதுறை நீடூர் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 09:55 GMT
அன்னதானம் வழங்கிய அதிமுக தொண்டன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கடைவீதியில் அப்பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டன் சுரேஷ்குமார் என்பவர் ஏற்பாட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்கள் சுமார் 200 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதில் வில்லியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, மாவட்ட பிரதிநிதி சதீஷ்குமார், மயிலாடுதுறை முன்னாள் நகர செயலாளர் ஸ்டாண்ட் கிருஷ்ணமூர்த்தி, மாணவரணி பொருளாளர் மார்ட்டின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.