அதிமுக நிர்வாகிக்கு கத்தி குத்து - முன்னாள் எம்பி நலம் விசாரிப்பு

லால்குடி அருகே பூவாளூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுகவினர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய கொடிகளை அகற்றச் சொன்ன அதிமுக நிர்வாகியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-11 06:35 GMT

நலம் விசாரிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூவாளூர் பேரூராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார் .இதற்காக பூவாளூர் பேரூராட்சியில் கொடிகள் தோரணங்கள் கட்டப்பட்டிருந்து. 3 நாட்களாகியும் கொடி,தோரணங்கள் அகற்றப்படாதால் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் கொடிகளை அகற்றுமாறு கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த திமுகவைச் சேர்ந்த 2 பேர் அதிமுக நிர்வாகி செந்தில்குமாரை கத்தியால் குத்தியினர்.

இதில் படுகாயம் அடைந்த அதிமுக நிர்வாகி செந்தில்குமார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக நிர்வாகி செந்தில் குமாரை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்.முன்னால் எம்பியுமான ப.குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். பூவாளூர் பேரூர் கழக செயலாளர்ஜெயசீலன் உடனிருந்தார்.

Tags:    

Similar News