ஆணழகன் போட்டியில் அசத்திய அதிமுக நிர்வாகி
திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு பகுதியில் நடைபெற்ற ஆண் அழகன் போட்டியில் அதிமுக நிர்வாகி மூன்றாம் இடம் பெற்றார்.;
Update: 2024-05-17 08:20 GMT
அதிமுக நிர்வாகி
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணற்றில் நேற்று (மே 16) மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் அதிமுக கிளை கழக செயலாளர் ஆறுமுகராஜா மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து ஆறுமுகராஜாவிற்கு நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர், கொண்டாநகரம் பகுதி கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.