ஆத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை ௯ட்டம்
ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுக கிளைக் கழக செயலாளர் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 12:49 GMT
அதிமுக ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் உட்பட்ட அப்பமசமுத்திரம் கொத்தம்பாடி, கல்பகனூர், தாண்டவராயபுரம்,சொக்கநாதபுரம், சீலியம்பட்டி,ஈச்சம்பட்டி,மல்லியகரை,
அரசனந்தம் ஊராட்சிகளில் உள்ள கழக கிளை கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகளை சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் குமரகுருவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரஞ்சித்குமார் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார்கள் உடன் தேமுதிக ஒன்றிய கழக செயலாளர் கண்ணியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்பு.