அதிமுக பொதுக்கூட்டம்
கெங்கவல்லிவட்டம் அருகே கூடமலை ஊராட்சியில், எம்ஜிஆர் திடலில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 06:10 GMT
அதிமுக பொதுக்கூட்டம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லிவட்டம் அருகே கூடமலை ஊராட்சியில், எம்ஜிஆர் திடலில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கெங்க வல்லி ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா தலைமை வகித்தார்.ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் கோவை மணிமேகலைகலந்து கொண்டு பேசினார். அதில் அதிமுக ஆட்சி காலத்தில் பொது மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டு பேசினார். கூட்டத்தில், கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, கெங்கவல்லி பேரூர் செயலாளர் இளவரசு, கூடமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துலிங்கம், தம்மம்பட்டி பேரூர் செயலாளர் குமரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.